செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By

சிம்மம்: சித்திரை மாத ராசி பலன்கள் 2021

கிரகநிலை: சுக ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி - களத்திர ஸ்தானத்தில் குரு (அ.சா) - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்ரன்,  சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் ராஹூ - லாப ஸ்தானத்தில் செவ்வாய் என கிரக அமைப்பு உள்ளது.

பலன்:
விறுவிறுப்பாக எதையும் செய்யும் திறன் படைத்த சிம்ம ராசி அன்பர்களே உங்கள் பேச்சில் வேகம் இருக்கும். இந்த மாதம் எல்லாவிதத்திலும் நன்மை உண்டாகும்.   ராசியில் இருக்கும் நக்ஷத்ராதிபதி சனியின் சஞ்சாரம் மனோ தைரியத்தை தரும். எதையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து திருப்திகரமாக இருக்கும்.  அந்நிய நபர்களிடம் கவனமாக இருப்பது நல்லது.  
 
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள்  அதிக உழைப்பின் மூலம்  லாபம் கிடைக்க பெறுவார்கள். பொருளாதாரம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள்  சாதகமாக பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையையும் கூடுதல் உழைப்பின் மூலம் செய்து முடிக்க வேண்டி இருக்கும்.
 
குடும்பத்தில் இருந்த  பிரச்சனைகள் நீங்கும். எதிர்பார்த்த தகவல் நல்ல தகவலாக இருக்கும். கணவன், மனைவி இருவரும் எந்த ஒரு முடிவையும் நிதானமாக  யோசித்து எடுப்பது நன்மை தரும். அவசரத்தை தவிர்ப்பது நல்லது. சகோதரர் வழியில் உதவியை எதிர்பார்க்கலாம்.
 
பெண்களுக்கு எதிர்ப்புகள் நீங்கும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.
 
கலைத்துறையினருக்கு வாய்ப்புகளைத் தேடி நீங்கள் பலரைச் சந்திக்கச் சென்ற நிலை மாறி வாய்ப்பு தானாகவே தேடி வரும். உங்கள் பெருமையும் , புகழும்  நாடெங்கும் நன்கு பரவும். உங்கள் அந்தஸ்தையும் உயர்த்திக் கொள்ளும் நிலை உண்டு. 
 
அரசியல்துறையினருக்கு உங்கள் தன்னலமற்ற தொண்டுக்குப் பாரட்டுகள் குவியும். தலைமையின் நன்மதிப்பையும்  தொண்டர்களின்பெரும் ஆதரவையும்  பெறுவீர்கள். உங்கள் செல்வாக்கும்  சொல்வாக்கும் அதிகரிக்கும். 
 
மாணவர்களுக்கு கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். தேவையான உதவிகள் கிடைக்கும்.
 
மகம்:
இந்த மாதம்  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த வேலையை எப்பாடுபட்டாவது செய்து விடுவீர்கள். புதிய வேலைக்கு  முயற்சிப்பவர்களுக்கு சாதகமான பலன்தரும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். 
 
பூரம்:
இந்த மாதம்  பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது மனதிருப்தியை தரும். உங்களது ஆலோசனை கேட்டு குடும்பத்தில் இருப்பவர்கள் செயல்படுவார்கள்.  ஆன்மீக நாட்டம் உண்டாகும். வீண் அலைச்சல் ஏற்படலாம். மாணவர்களுக்கு தொழில்நுட்ப கல்வியில் ஆர்வம் உண்டாகும். புதிய வகுப்புகளில் சேர முயற்சிகள்  மேற்கொள்வீர்கள்.
 
உத்திரம் 1ம் பாதம்:
இந்த மாதம்  சுபகாரியங்களில் கலந்து கொள்ள நேரலாம். காரிய வெற்றி உண்டாகும். இழுபறியாக இருந்தவை சாதகமாக முடியக்கூடும். தேவையற்ற கவலைகள் நீங்கும்.  உங்களை பற்றி விமர்சனம் செய்து வந்தவர்கள் அதனை விட்டு விடுவார்கள்.
 
பரிகாரம்: செவ்வாய்கிழமையில் விரதம் இருந்து மாலையில் சிவன், நவகிரகங்களை வணங்கி செவ்வாய் பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபட்டு வர எதிர்ப்புகள் விலகும். பிரச்சனைகளில் சுமூக முடிவு உண்டாகும். தைரியம் கூடும்.
சந்திராஷ்டம தினங்கள்: மே - 8, 9
அதிர்ஷ்ட தினங்கள்: மே - 1, 2.